Monday, April 6, 2015

மன்னார் முஸ்லிம்கள் பற்றி உலக மாநாடுகளிலும் நான் நினைவு கூர்ந்துள்ளேன்! - மன்னாரில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் -


பல வருடங்களுக்குப் பின் இன்று மன்னார் வருவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் பல காலமாக என்னை இம்மாவட்டதின் முன்னாள் தலைவரும், தற்போதைய நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான மௌலவி ஜுனைத் அவர்கள் அழைத்துக் கொண்டே இருந்தார்கள் அவர்களுடைய ஆவல் இன்று தான் நிறைவேறியது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம் ரிஸ்வி முஃப்தி அவர்கள் தெரிவித்தார்கள்.
இன்று 05.04.2015 காலை மன்னார், புதுகுடியிருப்பு ஸலாமிய்யா அறபுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்: நாம் எல்லோரும் ஸஹாபாக்கள் வரலாறுகளையும், அவர்களின் ஹிஜ்ரத் தொடர்பான விடயங்களையும்; படித்தும், காதுகளினால் கேட்டுமிருக்கிறோம். ஆனால் மன்னார் மக்களாகிய நீங்கள் அதனை அனுபவ ரீதியாக கண்டிருக்கிறீர்கள்;. அத்துடன் நீங்களும் அந்த நபித் தோழர்களது வாழ்க்கை வரலாறுகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களது ஹிஜ்ரத் நிகழ்வுகளை ஞாபகம் செய்வதானது உங்களுக்கு அது ஆறுதல் அளிக்கும்.

Tuesday, July 29, 2014

தற்பாதுகாப்பு தொடர்பாக இஸ்லாத்தினதும், இலங்கையினதும் சட்டங்கள்!

(தளபதி முன்னிலையில் ரிஸ்வி முஃப்தி உரை)

08.06.2014 அன்று தெஹிவளை முஹைதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற  கூட்டத்தில் அ.இ.ஜ.உ வின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்கள் ஆங்கிள மொழியில் ஆற்றிய உரையிலேயே இவைகளைக் குறிப்பிட்டார்.

அதாவது ஜம்இய்யதுல் உலமாவின் அழைப்பின் பேரில் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க முன்னிலையில் இவ்வாறு கூறப்பட்டது.

அவர் மேலும் கூறுகையில்: ..அளுத்கமையில் பிரச்சினைகள் நடைபெற்ற வேளையில் நாம் கொழும்பில் ஒரு மஸ்ஜிதில் முக்கியஸ்தர்களுடன் ஒரு கூட்டம் நடத்தினோம். அக்கூடத்திற்கு ஐபுP அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். அவர்களுக்கு நான் எமது அருமை நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பொன்மொழியை முன்வைத்தேன்.அத'னை நான் இங்கும் உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.