(தளபதி முன்னிலையில் ரிஸ்வி முஃப்தி உரை)
08.06.2014 அன்று தெஹிவளை முஹைதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் அ.இ.ஜ.உ வின் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஐ.எம்.ரிஸ்வி முஃப்தி அவர்கள் ஆங்கிள மொழியில் ஆற்றிய உரையிலேயே இவைகளைக் குறிப்பிட்டார்.
அதாவது ஜம்இய்யதுல் உலமாவின் அழைப்பின் பேரில் நிகழ்விற்கு வருகை தந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க முன்னிலையில் இவ்வாறு கூறப்பட்டது.
அவர் மேலும் கூறுகையில்: ..அளுத்கமையில் பிரச்சினைகள் நடைபெற்ற வேளையில் நாம் கொழும்பில் ஒரு மஸ்ஜிதில் முக்கியஸ்தர்களுடன் ஒரு கூட்டம் நடத்தினோம். அக்கூடத்திற்கு ஐபுP அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். அவர்களுக்கு நான் எமது அருமை நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு பொன்மொழியை முன்வைத்தேன்.அத'னை நான் இங்கும் உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு மனிதன் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் எனது செல்வத்தை (அநியாயமாக) பெற முயற்சிக்கிறான். (அப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?) எனக் கேட்டான். அதற்கு நபியவர்கள் 'நீ ஒருபோதும் அவனுக்கு உனது பொருளைக் கொடுக்காதே' என்றார்கள். அப்படியானால் அவன் என்னோடு போராடினால் (நான் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டான்) 'நீயும் போராடு' என்றார். 'அவன் என்னைக் கொன்று விட்டால்' (எனது நிலை என்ன என்று மறுபடியும் அந்த மனிதன் கேட்க) 'நீ ஷஹீத் எனும் உயிர்;தியாகி என்றார்கள'. நான் அவனைக் கொன்றுவிட்டால் அவனது நிலை என்ன என்று அந்த மனிதன் கேட்க 'அவன் நரகவாதி' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் (முஸ்லிம்)
அந்த நபிமொழியை முன்வைத்து உரையாற்றி ரிஸ்வி முஃப்தி அவர்கள் அதற்கு விளக்கம் கூறும்போது: உதாரணமாக எனது இந்தப் பேனையையோ அல்லது மொபைல் போனையோ அல்லது எனது கைக் கடிகாரத்தையோ ஒருவன் அநியாயமாக பறிக்க முற்படும் பொழுது அதனை நீ விட்டுக் கொடுக்காதே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனெனில் அவை சட்டபூர்வமான எனது உடைமைகள். அதனை விட்டுக்கொடுக்க முடியாது எனக் கூறினார்.
அதுமட்டுமல்ல இந்நாட்டு சட்ட யாப்பின் படியும் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய உரிமை எமக்கு இருக்கிறது. இதனை பினெல் கோட் சட்டம் 89 ல் இருந்து 99 வரையிலான பகுதிகள் எமக்கு தெளிவுபடுத்துகின்றன.
இவற்றுக்கு மத்தியில் நாம் முஸ்லிம்கள் மிகக் தெளிவாக இருக்கிறோம். ஏனெனில் நாம் சமாதானத்தை விரும்புகிறவர்கள். இது எமது நாடு. இதனை நாம் கட்டியெழுப்ப வேண்டும். மட்டுமல்லாது மனித உணர்வுகளையும், மனிதத்தையும் நாம் மதிக்கிறோம். ஒரு தடவை ஒரு யூதனுடைய ஜனாஸா தூக்கிச் செல்லப்படும் போது நபி (ஸல்) எழுந்து நின்றார்கள். அப்பொழுது நபித்தோழர்கள் அது ஒரு யூதனுடையது ஏன் எழுந்து நிற்க வேண்டுமென்று கேட்டதற்கு 'அவனும் மனிதனல்லவா. மனிதத்தை மதிக்க வேண்டுமல்லவா' எனக் கூறினார்கள்.
எனவே இதனடிப்படையில் நாம் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சகலரும் ஒன்று சேர்ந்து இந்நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.
அத்துடன் இந்நிகழ்வுக்கு வருகை தந்தமைக்காக நாம் உங்களுக்கு நன்றி செலுத்துவதுடன் எமது சகவாழ்வு தொடர்பான 'சகவாழ்வுப் பிரகடனம்' யையும் உங்களுக்கு ஒப்படைக்கிறேன் எனக்கூறி சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலான பிரகடனத்தையும் அவருக்கு வழங்கினார். (Thanks ACJU News Letter Issue No:04)
No comments:
Post a Comment